வட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகள் தொடர்பில் - இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள செய்தி

வட்ஸ்அப் செயலியின் தனியுரிமைக் கொள்கையின் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், அதன் பயனர்களின் செயல்பாடுகளை வட்ஸ்அப் செயலியின் மூலம் கண்காணிக்கவும், அந்தத் தரவை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவும் பேஸ்புக்கினை அனுமதிக்கும் என்று இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) தெரிவித்துள்ளது.

வட்ஸ் அப்பின் புதிய தனியுரிமை கொள்கை, வட்ஸ் அப் சேவை மற்றும் தரவுகளை கையாளும் விதம், வட்ஸ் அப் சேவையை பயன்படுத்தும் வர்த்தகங்கள் பேஸ்புக் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவது மற்றும் பயனாளிகளின் உரையாடல்களை கையாள்வது மற்றும் பேஸ்புக் சார்ந்த சேவைகளுடம் இணைந்து செயல்படும் விதம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் வட்ஸ்அப் பயன்பாட்டின் சேவை விதிமுறைகள் பெப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் பயன்பாட்டின் அறிவிப்பு மூலம் பயனர்களுக்குத் தெரிவித்துள்ளது. 

"எனவே, பெப்ரவரி 8 முதல் அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் புதிய விதிமுறைகள் மற்றும் புதிய தனிப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் அதை ஏற்க விரும்பாத பயனர்கள், பெப்ரவரி 8 முதல் வட்ஸ்அப் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இழப்பார்கள் ”எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.