நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு அமைவாக 5 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ASTRA ZENECA COVISHEILD எனும் கொரோனா தடுப்பூசி இன்றைய தினம் சுகாதார சேவையாளர்கள் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டிருந்தது.
இதன்படி, நாட்டில் முதலாவது கொரோனா தடுப்பூசி இராணுவ வைத்தியசாலையில் மூவருக்கு வழங்கப்பட்டது.
நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்பட்ட இராணுவத்தினர் மூவருக்கு இவ்வாறு AstraZeneca Covishield தடுப்பூசி வழங்கப்பட்டது.
அத்துடன், தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நாட்டில் straZeneca Covishield கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்ட முதலாவது சுகாதார பணியாளராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னின்று செயற்பட்டு வரும் சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர், பொலிஸார் உட்பட ஏனைய பாதுகாப்புப் படையினருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயிரத்து 886 பேருக்கும், கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு போதனா வைத்தியசாலைகளில் ஆயிரத்து 584 பேருக்கும் தடுப்பூசி வழங்க்பட்டுள்ளது.
அத்துடன், இராணுவ வைத்தியசாலையில், 600 பேருக்கும், கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் 382 பேருக்கும் இன்று தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசி வழங்கபட்ட யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment