கொரோனா தொற்றுக்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஹிக்கடுவை சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று நண்பகல் உறுதிப்படுத்தியது.
மேற்படி அமைச்சர் ரெபிட் எண்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பி.சீ.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.
இதன்போது இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்று ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவர் இறுதியாக கலந்து கொண்டதோடு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட சுகாதார பிரிவின் உயரதிகாாிகள் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
அவ்வாறே சுகாதார அமைச்சர் நேற்று முன் தினம் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டுள்ளார்.
Post a Comment