பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது அமைச்சரவை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (01) திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விவகாரம்கு றித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள் தொடர்பில் பிரதான தரப்புகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கோ அல்லது பன்நாட்டு நிறுவனத்துக்கோ வழங்குவதற்கு அரச பங்காளிக்கட்சிகளான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, தூய ஹெல உறுமய உள்ளிட்டவை எதிர்பை வெளியிட்டுள்ளன. அரசுக்கு சார்பான அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இது தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார் அதாவது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ, குத்தகைக்கு விடவோ அல்லது எந்தவொரு வெளிநாட்டுடனும் ஒப்பந்தத்தில் ஈடுபடவோ முடியாது என்று. 

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று அமைச்சரவை கூடுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.