- அனைத்து பள்ளிவாசல்களிலும் எந்த நேரத்திலும் எந்தத் தொழுகைக்கும் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ள முடியும்.
- ஐம்பது நபர்களை தேர்ந்தெடுக்கும் முறை தொடர்பாக ஜமாத்தினருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட வேண்டும்.
- ஏனைய வழக்கமான சமய நடவடிக்கைகள் மற்றும் திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் எந்த நேரத்திலும் அதிகபட்சம் 50 நபர்களுக்கு உட்பட்டதாக மேற்கொள்ள முடியும்.
- சுகாதார/பாதுகாப்பு தரப்பினரின் விதிமுறைகளையும் முன்னர் வக்ப் சபையினால் விதிக்கப்பட்ட வழிகாட்டல்களையும் தொடர்ந்தும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடி வைத்தல் வேண்டும்.
- மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து குர்ஆன் மத்ரசா, மக்தப், ஹிப்ழ் மத்ரசா, அஹதியா பாடசாலை ஆகிய முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் மீள எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
பணிப்பாளர்,
முஸ்லிம் பள்ளிவாசல்கள் தரும நம்பிக்கைப் பொறுப்புகள் அல்லது வக்புகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
08.02.2021
Post a Comment