ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் ஐ.நா சபை விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்...!

கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள தீர்மானத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

குறித்த செயற்பாடு நாட்டிலுள்ள முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்ட அல்லது தொற்றுதியானாக சந்தேகிக்கப்படும் சடலங்களை கையாள்வதற்கான ஒரே வழியாக தகனம் செய்யப்படுவது மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்கு சமமானதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் கொவிட்-19 காரணமாக மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதனால் தொற்று பரவுவதற்கான ஆதாரங்கள் எவையும் வெளிப்படவில்லை.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி வரையில் 274 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதோடு அவற்றில் அதிகமானோர் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினராவர்.

கொவிட்-19 பரவலை கட்டுபடுத்துவதற்கு பொதுவான சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுகின்ற போதிலும் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களுக்கு கௌரவமளிக்கும் அதேவேளை, அவர்களின் மரபு, கலாசாரம் மற்றும் நம்பிக்கை என்பவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழு வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.