சற்றுமுன் நாட்டில் நான்கு கொரோனா மரணங்கள் பதிவானது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.-

கொரோனா நியுமோனியா தாக்கம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 60 வயதான ஆணொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த 78 வயதான ஆணொருவர் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கொரோனா நிமோனியா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கடந்த 13 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், கொரோனா தொற்றே அவர் உயிரிழப்பதற்கு காரணமென சுகாதார துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 255 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.