நாட்டில் மேலும் சில கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம்: பொதுமக்கள் எச்சரிக்கை!

மேல் மாகாணத்திற்கு வெளியே மேலும் சில கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் உள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றின் தாக்கம் மேல் மாகாணத்தில் குறைவடைந்துள்ளதாகவும், அது ஏனைய மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், பெரும்பாலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்படாத மாத்தளை, கண்டி, நுவரெலிய, குருநாகல், மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், தற்போது உப கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

அண்மையில் பண்டிகை காலங்களில் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், இது மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் கொடிய வைரஸுக்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், கொழும்பு கிழக்கில் மேலும் அபாய நிலைமை உள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.