அமைச்சர் பவித்ராவின் பி.சி.ஆர் முடிவுகள் வெளியானது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த அன்டிஜன் பரிசோதனையில் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பி சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த ஆகியோருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.