மலையகத்தில் மிகவும் ஆர்வத்துடன் பாடசாலை வந்த மாணவர்கள்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களைத் தவிர்ந்து ஏனைய அனைத்து பாடசாலைகளில் இவ்வருடத்தின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (11) சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஆரம்பமாகின.

இதற்கமைய, மலையகப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மிகவும் ஆர்வமாக மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

ஒவ்வொரு பாடசாலையிலும் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலை அளக்கப்பட்டு கைகள் கழுவுப்பட்ட பின்னர் மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டன.

மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததுடன் ஒரு மீற்றர் இடைவெளி பேணும் வகையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

நேற்றைய தினம் சகல பாடசாலைகளும் தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்ட கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஆயத்தம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் கல்வி வலயத்தில் 150 பாடசாலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட மவுன்ஜீன் பாடசாலையை தவிர்ந்த ஏனைய 149 பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீPதரன் தெரிவித்தார்.

பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் கல்வி அமைச்சினாலும் சுகாதார அமைச்சினாலும் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் பின் பற்றி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது கட்டாயம் முகக்கவசம் அணிந்திக்க வேண்டும். வீட்டிலிருந்து வரும் மற்றும் வீடு செல்லும் மாணவர்கள் இதனை பின்பற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.

உடல் வெப்பநிலையை அளவிட்டு எவருடைய உடல் குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக காணப்பட்டால் அவர்களுக்கு ஓய்வு அறையில் ஓய்வெடுக்க செய்து விட்டு சுகாதார துறையினருக்கும் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட வேண்டும். மாணவர்கள் சுகயீனமான நிலையில் பாடசாலைக்களுக்கு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு ஏனைய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயப்பாடுகளை முன்னெடுக்க வேணடும். எனவும் அவர் இதன் போது வலியுறுத்தினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.