பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குபுறம்பானவை என பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர் என சகோதர ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் சிறந்த உடல்நிலையுடன் காணப்படுகின்றார் நாளாந்த கடமைகளில் ஈடுபடுகின்றார் என பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை முதல் சமூக ஊடகங்களில் பிரதமரின் உடல்நிலை குறித்து வெளியாகும் செய்திகள் குறித்து அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் ஆனால் அந்த தகவல்கள் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர் தனது நாளாந்த அலுவல்களில் ஈடுபட்டுள்ளார் நாளைய நிகழ்வுகளில் கலந்துகொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment