பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை.

வர்த்தக நிலையங்கள், அங்காடிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளை முன்னெடுக்கும்போது, அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானிக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்று முதல் கண்காணிக்கப்படவுள்ளது.

இதற்காக விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சாரதிகள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றி பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்கள் வாகனங்களுக்குள் உள்வரும் போதும் வெளியேறும் போது பாதுகாப்பு முகக்கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலை வாகனசேவை மற்றும் பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் மாணவர்கள் எவருக்கேனும் வைரஸ் பரவல் தொடர்பான அறிகுறிகள் காணப்படுமாயின் சாரதிகள் சுகாதார தரப்பினருக்கு உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார். 

சமூக இடைவெளியை பேணுதல், கிருமித் தொற்று நீக்கம் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.