ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

இந்த நாட்டில் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம் வெளிநாட்டு விவசாயிகளுக்கு செல்லும் பணம் உள்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்க வழி செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

'கிராமத்துடன் கலந்துரையாடல்' திட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத் துறையை முன்னேற்றுவதற்காக விவசாய சமூகத்திற்கு தேவையான நீர், உரம், தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கும் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.

இதற்காக இந்த ஆண்டுக்கான பாதீட்டில் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் உள்ளூர் ஒதுக்கீடுகளின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 800 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவடையவில்லை.

இந்த திட்டங்கள் அனைத்தையும் விரைவாக நிறைவுசெய்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சுமார் 75% கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான ஒரு நிலையான வேலைத்திட்டம் அவசியமாகும்.

பாரம்பரியமாக விவசாய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் காரணமாக தற்போதைய தலைமுறை விவசாயத்திலிருந்து விலகிச் செல்கிறது.

கிராமப்புறங்களில் நிலவும் பிரச்சினைகளை சட்ட திட்டங்களின் அடிப்படையிலன்றி, மக்களை கவனத்திற்கொண்டு தீர்க்க நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும்.

எனவே, அலுவலகங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது கிராமங்களுக்குச் சென்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, பணியாற்றுவது அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.