மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

நாட்டில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலத்தில் எம்பிலிபிட்டிய, கல்கிஸ்ஸ, குருணாகலை, கட்டுகஸ்தோட்ட, புத்தளம் மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, மோட்டார் வாகன உரிமையாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தமது வாகனங்கள் திருடப்படுவதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.