அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தாக கூறப்படும் 21 நாட்களான சிசுவின் உடல் எரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதியரசர்களான பிரியந்த ஜயவர்த்தன, எல் டி பி தெஹிதெனிய,யசந்த கோதாகொட மற்றும் ஏ எச் எம் டி வாஸ் ஆகிய நீதியரசர்கள் குழுாத்தினாலேயே இந்த தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது மனுதாரர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தற்போது சுகயீனமுற்றுள்ளமையினால் மனுவை விசாரிக்க பிரிதொரு தினத்தை வழங்குமாறு இதன் போது அவரது சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
இந்த நிலையில கொரோனா உயிரிழப்புக்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மனுக்கெதிரான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய காலெக்கெடுவொன்றை வழங்குமாறு இதன் போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிஸ்டர் நாயகம் நெரின் புள்ளே மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதனடிப்படையில் இந்த மனுக்கெதிரான ஆட்சேபனைகளை வெளியிட பிரதிவாதிகளுக்கு ஆறு வார கால அவகாசத்தை வழங்கிய உயர் நீதிமன்றம் வழக்கை மீண்டும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்தது.
Post a Comment