கண்டியில் மற்றொரு பகுதி முடக்கம்!

கண்டி மாவட்டத்திலுள்ள மற்றுமொரு பகுதியை முடக்குவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, கண்டி – பூஜாபிட்டி – கொஸ்கொட்டே பகுதியே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் 31 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னணியிலேயே, பிரதேசத்தை முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியைச் சேர்ந்த 85 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருந்ததுடன், அவர்களில் 31 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.