எம்.பி பதவியை ஏற்க தயாராகிறார் ரணில்?

பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியில் உறுப்பினர் பதவியை ஏற்க, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 06 மாதங்களுக்கு மேல் வெற்றிடமாகக் காணப்படும் இந்தத் தேசியப் பட்டியில் உறுப்பினர் பொறுப்பை ஏற்குமாறு, கட்சியின் முன்னிலை உறுப்பினர்களான அகில விராஜ் காரியவசம், ரங்கே பண்டார போன்றவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டுமென்று கட்சியின் உயர்பீடமும் அறிவித்திருந்தது.

விடுக்கப்படும் கோரிக்கைகள், அழுத்தங்கள் காரணமாக, தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியைப் பொறுப்பேற்க ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாகத் தெரியவருகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.