கொழும்பு செல்லும் வாகன சாரதிகளுக்கு பொலிசார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

எதிர்வரும் 4ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள சுதந்திரதின பேரணிக்கான ஒத்திகை காரணமாக, எதிர்வரும் 30ம் திகதி முதல் 3ம் திகதிவரை 5 நாட்களுக்கு கொழும்பு சுதந்திர சதுர்க்க வளாகத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதன்படி, பொரளை முதல் தாமரைத்தடாக சுற்றுவட்டம் வரையான வீதி மூடப்படவுள்ளது.

இதன்காரணமாக, பொரளையில் இருந்து பிரவேசிக்கும் வாகனங்கள், ஹோட்டன் பிரதேசம் ஊடாக விஜேராம மாவத்தை மூலம் வோட் பிரதேசத்தை நோக்கி பயணித்து, நகர மண்டபம், யூனியன் பிரதேசம் ஊடாக பயணிக்க முடியும்.

கொழும்பில் இருந்து பொரளை நோக்கி பயணிக்கும் வாகனங்களும் குறித்த வீதியைப் பயன்படுத்த முடியும்.

எவ்வாறிருப்பினும், காலி வீதி மற்றும் பௌத்தாலோக மாவத்தையின் போக்குவரத்து வழமைபோல இடம்பெறும் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.