பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தாம் ஆதரவளிப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் முன்னாயத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்து அதிபர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பிராந்திய பொது சுகாதார நரிசோதகர்களின் மூலம் பாடசாலைகளில் வாராந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகளைக் கையாள தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment