கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ, குத்தகைக்கு விடவோ அல்லது எந்தவொரு வெளிநாட்டுடனும் ஒப்பந்தத்தில் ஈடுபடவோ முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் வெளிநாடுகளின் ஈடுபாட்டுக்கு, அமைச்சரவையில் பெரும்பாலானோர் எதிராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய சொத்துக்களை விற்பனை செய்வது அரசாங்கத்தின் கொள்கை அல்ல எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Post a Comment