தனிமைப்படுத்தல் குறித்து இன்று காலை வெளியான அறிவிப்பு

இன்று காலை 6.00 மணி முதல் அமுலாகும் வகையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஹம்பாந்தோட்டை- அம்பலாந்தொட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலக்கம் 140 பொலான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் மல்கோனிய பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பூஜாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளியகொட்டுவ மற்றும் கல்ஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கிழக்கு மாகாணத்தின் கல்முனை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை-1 C , கல்முனை-1 E, கல்முனை- 2 கல்முனை- 2 A, கல்முனை 2 B, கல்முனை- 3A ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், கல்முனை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட கல்முனை- 1 MD, மற்றும் கல்முனை குடி- 1, கல்முனை குடி- 2 , கல்முனை-3 MD ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.