முழு ஹபுகஸ்தலாவையும் கலங்க வைத்த சம்பவம்.

சமூகப் பொதுப் பணிகளில் இயல்பாகவே மனமுவந்து எந்நேரத்திலும் களமிறங்கிச் செயல்படக் கூடியவர்களுடைய பெறுமதியை மட்டிட முடியாது.

ஹபுகஸ்தலாவைப் பிரதேசத்தில் மரணம் ஒன்று சம்பவித்தால், அத்தியாவசிய பொதுப் பணிகள் என்று வந்துவிட்டால் இவ்வாரானவர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.

(சுமார் 22 வருடகாலம் ஜனாஸா நல்லடக்கம் செய்யும் பணியில் முன்னின்று பாடுபட்டவர்)

கடந்த நோன்புப் பெருநாள் தினம் கிராமத்தில் மரணமொன்று சம்பவித்திருந்தது.

தாயாரின் கபுரடிக்கு சென்றபோது மேலே குறிப்பிட்டவர்களின் மகிமையைப் புரிந்து கொண்டேன்.

நோன்புப் பெருநாள் தினத்திலும் ஜனாசாவுக்கான கப்ரை அக்கறையுடன் தோண்டிக் கொண்டிருந்தார்கள். 

சகோதரர் S. L.M இர்ஃபான் பொறுப்போடு செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

பொதுப் பணிகளில் மாத்திரமல்ல, விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர்.

அவருக்கு ஏற்பட்ட திடீ‌ர் சுகயீனம் காரணமாக நாவலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பேராதெனிய வைத்தியசாலை அவசர சேவைப் பிரிவில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மிகவு‌ம் அதிர்ச்சியளிக்கும் விடயம்.

நேற்றிரவு அவர் காலமானதாகவும் அவருக்கு கொரோனா Positive என்ற ஒரு தகவலை புதிதாக வெளியிடும் வைத்தியசாலை அதிகாரிகள் ஜனாசாவை இன்று கொரோனா விதிமுறைகளின் அடிப்படையில் கையாளப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

அவருடைய அன்புத் தந்தையும் அண்மையிலேயே காலமானார்கள். 

எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்குவானாக!

தாளாத சோகத்தில் இருக்கும் அவருடைய குடும்பத்தினர், மனைவி பிள்ளைகளுக்கு நல்லருள் புரிவானாக! 

சிறந்த ஒருவரை இழந்துவிட்ட சோகத்தில் ஊர்மக்கள். 

(எதோ ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சீரழிவை நோக்கி நாடு நகர்த்தப்படுகிறதா? எல்லாம் வல்ல இறைவன் தீர்பளிக்கப் போதுமானவன்.)

நன்றி: மஸீஹுதீன் Masihudeen Anasullah

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.