சுதந்திரதினம் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையின் 73 ஆவது சுதந்திரதினம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தேசிய கொடியை பறக்க விடுமாறு தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

சகல வீடுகள், வியாபார நிலையங்கள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், மற்றும் வாகனங்களில் இவ்வாறு தேசிய கொடியை பறக்க விடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச அலுவலகங்கள் அல்லது நிறுவனங்கள் அமைந்துள்ள சகல கட்டடங்களையும் பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'செழிப்பான எதிர்க்காலம் : சௌபாக்கியமான நாடு' என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர தின நிகழ்விற்கான கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.