மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகளை நாளையதினம் மீள ஆரம்பிப்பது தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாடசாலை வளாகங்களில் நுளம்புகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 247 டெங்கு நேயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
Post a Comment