கடும் மழை காரணமாக வீட்டின் மீது சரிந்து விழுந்த பாரிய கல் - மலையகத்தில் சம்பவம்.

மலையக பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் பெய்கின்ற கடும் மழையினால் கினிகத்தேனை பிட்டவல கீ கியனாகெதர கிராம பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்துள்ளதால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வீட்டின் இரண்டு அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த சில பொருட்கள் சேதமாகியுள்ளதோடு, சுவர்களும் சரிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவ இடம்பெறும் போது வீட்டில் ஆறு பேர் இருந்துள்ள நிலையில், குறித்த ஆறு பேரும், அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு தற்போது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

எனினும் சம்பவம் ஏற்படும் போது, சிறு குழுந்தையோடு இருந்த தாய் காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. 

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை கிராம சேவகர் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.