கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கோனபொல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 290 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 742 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 664 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 520 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக கொரோனா தொற்றை தடுக்கும் தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை நாட்களில் அதிகளவு தொற்றாளர்கள் ஒரே நாளில் குணமடைந்த முதலாவது சந்தர்ப்பமாக இது இடம்பெற்றதுள்ளது.
மேலும், குறித்த தொற்றாளர்கள் குணமடைந்ததின் ஊடாக நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 566 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான நிலையில், 7 ஆயிரத்து 808 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
Post a Comment