நாட்டில் இன்றைய தினம் இதுவரையில் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,501 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவரும், கொழும்பு 06 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரரும், மற்றும மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Post a Comment