இவ்வருடம் 17ம் திகதி தொடக்கம் 22ம் திகதிவரையான 6 நாட்களல் 427 விபத்துக்கள் இலங்கையில் பதிவாகியுள்ள நிலையில் குறித்த விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். ,
அத்துடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் 189 பேர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 427 வீதி விபத்துக்களின் போது 119 வாகனங்கள் சேதங்களுக்குள்ளாகியும் உள்ளன.
அதோடு கடந்த 24 மணிநேரத்தில் பதிவான வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலேயே சிக்குண்டவர்கள் என்றும் பிரதிப் பொலிஸ் அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment