நேற்று மாத்திரம் மத்திய மாகாணத்தில் 47 பேருக்கு கொரோனா! 4000ஐ கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இன்று (27) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 755 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

அவர்களுள் 07 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

எஞ்சியவர்களுள் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 369 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 124 பேரும் கண்டி மாவட்டத்தில் 23 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 பேரும் யாழ். மாவட்டத்தில் 06 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 15 நபர்களும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் இருவரும் மாத்தளை மாவட்டத்தில் 22 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் ஐவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கோட்டை பிரதேசத்தில் 20 பேருக்கும் கொம்பனித்தெரு பிரதேசத்தில் 6 பேருக்கும் கொள்ளுப்பிட்டியில் 8 பேருக்கும் பம்பலப்பிட்டியில் 7 பேருக்கும் வௌ்ளவத்தை பகுதியில் 9 பேருக்கும் பொரளையில் 6 நபர்களுக்கும் மருதானை பகுதியில் 11 பேருக்கும் புறக்கோட்டை பகுதியில் 9 பேருக்கும் ஆட்டுப்பட்டித்தெரு பிரதேசத்தில் 10 பேருக்கும் கொட்டாஞ்சேனையில் 7 பேருக்கும் கிரேண்ட்பாஸ் பகுதியில் 8 பேருக்கும் மட்டக்குளி பிரதேசத்தில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கம்பஹா மாவட்டத்தின் களனி பகுதியில் ஒருவரும் நீர்கொழும்பு பகுதியில் நால்வரும் வத்தளை பிரதேசத்தில் ஐவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அம்பாறை – கல்முனை பகுதியில் 10 பேர், அக்கரைப்பற்று பகுதியில் நால்வர் உட்பட அம்பாறை மாவட்டத்தில் 15 பேர் புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நுவரெலியா லிந்துலை பிரதேசத்திலேயே ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கோப்பாய் பகுதியில் மூவர், திருக்கோவில் பகுதியில் ஒருவர், சாவகச்சேரியில் இருவர் அடங்கலாக யாழ். மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, மொனராகலை, பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இன்று (27) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 59,922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 51,049 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (26) ராகம பகுதியை சேர்ந்த ஒருவரது கொரோனா மரணம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்தும் 8,030 பேர் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நிலையில், நேற்று (26) மாத்திரம் 16,431 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.