நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவன்னெலிய பகுதியில் முச்சக்கரவண்டியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
கினிகத்தேனையிலிருந்து நோட்டன் பிரிஜ் வந்த முச்சக்கரவண்டியே நேற்று (02)மாலை பாதையை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது,
விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து நாலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment