இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரின் பிரத்தியேக செயலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் 118 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதாவது, தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய சமய பெரியார்கள் ஐந்து பேர் உட்பட ஹெட்டிப்பொலவிலுள்ள அலுவலகத்திற்கு மக்கள் சந்திப்பு தினத்தன்று சமூகமளித்த 75 பேரே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை அமைச்சரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment