கண்டி மாவட்டத்தின் நேற்று மாத்திரம் 110 பேருக்கு கொரோனா....

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தை அடுத்து, கண்டி மாவட்டத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் அதிகமானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய கண்டி மாவட்டத்தில் 110 பேருக்கும், கம்பஹாவில் 106 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.

இது தவிர குருநாகல் மாவட்டத்தில் 40 பேருக்கும், காலியில் 38 பேருக்கும், இரத்தினபுரியில் 31 பேருக்கும், களுத்துறையில் 28 பேருக்கும், மாத்தளையில் 27 பேருக்கும், கேகாலையில் 24 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் 22 ஆயிரத்து 373 பேருக்கும், கம்பஹாவில் 11 ஆயிரத்து 986 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 370 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 961 பேருக்கும், காலி மாவட்டத்தில் ஆயிரத்து 367 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 367 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் ஆயிரத்து 205 பேருக்கும் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

நாட்டில் இதுவரையில் 57 ஆயிரத்து 587 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 49 ஆயிரத்து 261 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 8 ஆயிரத்து 46 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர நேற்று இரண்டு கொவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, முப்படையினரின் கண்கானிப்பின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற 91 தனிமைப்படுத்தல் மையங்களில் 8 ஆயிரத்து 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றைய தினம் நாட்டில் 18 ஆயிரத்து 515 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.