நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.

இதனப்டி, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், கண்டி மாவட்டத்தின் சில இடங்களிலும் இவ்வாறு 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.