பாராளுமன்றத்தில் கொரோனா தடுப்பு மருந்து அருந்திய MPகள்!

ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தினை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

கேகாலையைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார இன்று குறித்த மருந்தினை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஆயுர்வேத மருந்தினை அருந்தியுள்ளனர்.

மேலும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி உள்ளிட்ட பல அமைச்சர்கள் குறித்த ஆயுர்வேத மருந்தினை பருகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், தனது மருந்தின் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டாரவால் இலவசமாக விநியோகிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தினைப் பெற்றுக்கொள்வதற்கு கடந்த நாட்களில் பெருமளவு மக்கள் கேகாலைப் பிரதேசத்தில் கூடியிருந்தனர்.

எனினும் சுகாதார விதிமுறைகள் காரணமாக தற்போது குறித்த மருந்து விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.