அமைச்சு பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து, தாம் இராஜினாமா செய்துள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து விலகும் வகையில், தனது இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நீதி அமைச்சர் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்குடன், நீதி அமைச்சர் இவ்வாறு இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், நீதி அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என நீதி அமைச்சர் அலிசப்ரி மறுப்பு தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment