
இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கைகளிற்கு எதிராக லண்டன் உள்ள இலங்கை தூதுரகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்ததன் காரணமாக தகனம் செய்யப்பட்ட 20வயது குழந்தையின் படத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காண முடிந்தது.
இதேவேளை பிரிட்டன் அரசாங்கம் இந்த விடயம் குறித்து தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

கட்டாயமாக உடல்கள் தகனம் செய்யப்படுவது முஸ்லீம் சமூகத்தின் மீதும் ஏனைய சமூகத்தினர் மீதும் ஏற்படுத்திவரும் தாக்கம் குறித்து பிரிட்டன் கவனை ஈர்த்துள்ளது.
மனித உரிமை விவகாரங்களிற்கான அமைச்சரான தாரிக் அஹமட் பிரபு இலங்கை உயர்ஸ்தானிகருடன் நேரடியாக இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
Post a Comment