நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 597 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 299 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 526 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 66 பேரும், அடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 571 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் யுக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து இலங்கை வந்த தலா 2 பேருக்கும் , பங்களாதேஸில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

7 ஆயிரத்து 776 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், நேற்றைய தினம் 706 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் 35 ஆயிரத்து 329 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, தெற்கு அதிவேக வீதியின் கௌனிகம நுழைவாயில் சேவையாற்றிய காவல்துறை அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்காரணமாக அங்கு அவருடன் கடமையாற்றிய 14 காவற்துறை அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் எண்டிஜன் பரிசோதனையில் மேலும் 5 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுறுதியான 130 கர்ப்பிணி தாய்மார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 46 பேர் குழந்தைகளை பிரசவித்துள்ளதாக முல்லேரியா கிழக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரியந்த கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.