நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 536 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் பேலியகொடை கொரோனா கொத்தணியை சேர்ந்த 461 பேரும் சிறைச்சாலை கொரோனா கொத்தணியை சேர்ந்த 75 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்று இரண்டாம் அலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 352 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 570 பேர் குணமடைந்துள்ள நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment