நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

பண்டிகைக்காலங்களின் போது பொது மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பண்டிகைக்காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில் குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன பொது மக்களை வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் பொருட்கொள்வனவில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள விற்பனை நிலையங்களிலேயே பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பண்டிகைக்காலங்களில் குடும்பம் அல்லது உறவினர்கள் எனும் அடிப்படையில் ஒன்று கூடுவதை தவிர்த்துகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பண்டிகைக்காலங்களில் வாழ்த்துக்களை தெரிவிக்கும்போது சமூக இடைவெளியினை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதியவர்கள் மத்தியில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவுவதன் காரணமாக, முதியவர்களை ஒன்று கூடலில் இருந்து தவிர்க்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில், வீடுகளுக்கு வெளி நபர்கள் வருகையை மட்டுப்படுத்துமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், பொது இடங்களில் சமூக இடைவெளியினை கடைபிடிக்கத் தவறுபவர்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் பொதுமக்களுக்கு உரிமை உண்டு எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகைக்காலத்தின் போது பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஒன்லைன் வசதி காணப்படுமானால் அதனை பயன்படுத்துமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு பயணிக்கும் போது பாதுகாப்பு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைபிடித்தல் மற்றும் கைகளை சுத்தப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் கடைபிடிக்குமாறும் பொது மக்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.