கம்பளையில் சினிமா பாணியில் கொள்ளை! இளைஞன் மடக்கிப்பிடிப்பு!!

கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவர் குறுந்துவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெட்டகேதெனிய பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பட்டபகலில் மிகவும் சூட்சுமமான முறையில் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார். இது தொடர்பில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சிசிரிவி கமராக்களின் உதவியுடன் பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கி, குறுந்துவத்த – மாரகந்த பகுதியில் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் மடக்கிப்பிடித்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

வெட்டகேதெனிய உட்பட அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீடுகளுக்கு புகுந்து இவரே தங்க ஆபணரம் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களை களவாடியுள்ளார் என்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு களவாடப்பட்ட தங்க ஆபரணங்களை நபரொருவரின் உதவியுடன் கம்பளை நகரிலுள்ள தங்கநகை அடகுபிடிக்கும் நிலையங்களில் அடகுவைத்து பணம் பெற்றுள்ளார். அப்பணத்தில் சொகுசு மோட்டார் சைக்கிளொன்றையும் வாங்கியுள்ளார். தவறான நடத்தைகள் காரணமாக இவர் ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

19 வயதான குறித்த இளைஞரிடமிருந்து மோட்டார் சைக்கிள், அடகுவைக்கப்பட்ட தங்க நகைகள், களவாடப்பட்ட மஞ்சள் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறுந்துவத்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி விஜேரத்தினவின் வழிக்காட்டலுக்கு அமைய, குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஜ.பி. முனசிங்க தலைமையில் பொலிஸ் அதிகாரி அதநாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் புத்திகவரத்தன, பொலிஸ் உத்தியோகத்தர்களான அக்கலங்க 59856 , ஏராத் 55041, கொடிதுவக்கு 70509, விஜேசிறி 74768, சேனாரத்தின 80903 ஆகியோரே இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.