நாளை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்படவுள்ள பகுதிகள்…
நாளை (21) அதிகாலை 05 மணி முதல் நாட்டின் சில பகுதிகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளதாக COVID – 19 தொற்று ஒழிப்பிற்கான செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலமுல்ல கிராம சேவையாளர் பிரிவு மற்றும் வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.
வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலப்பிட்டிய – நைதூவ பகுதி, பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம சேவகர் பிரிவு மற்றும் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் விலேகொட வடக்கு கிராம சேவையாளர் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன பகுதிகள்...
நாளை காலை 5 மணி முதல் சில பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடை – கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள நெல்லிகஹவத்த மற்றும் பூரணகொட்டு வத்த ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளன.
மேலும், கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள ஶ்ரீ ஜயந்தி மாவத்தையும் நாளை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
Post a Comment