எதிர்வரும் பண்டிகை காலங்களில் நாட்டில் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் அறிவிப்பு குறித்து இதுவரை எந்தவித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தவார இறுதியில் கிடைக்கப்பெறும் தரவுகளை கவனத்திற் கொண்டே தீர்மானிக்கப்படும் எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டின் தற்போதைய நிலைமைய கருத்திற்கொண்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொதுமக்கள் இயலுமானவரை மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதை தவிர்த்து செயற்படுமாறும் ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment