கொரோனாவில் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்கள் எரிக்காமல் அடக்கம் செய்ய கேட்டு ஆர்பாட்டங்கள் நடத்துகின்றார்கள். கொரோனா உடல்களை அடக்கம் செய்யக் கூடாது எரிக்கத் தான் வேண்டுமென கோரி இன்று (26) கலுத்துறையில் “ரடட ஹெடக்” அமைப்பின் பிக்குகள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய வேண்டுமெனக் கூறி முஸ்லிம்கள் சார்பில் நேற்று கலுத்துறையில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதில் பேசிய ஒரு முஸ்லிம் இளைஞர் முஸ்லிம் ஜனாஸா அடக்கத்திற்கு அரசு அனுமதி தராவிட்டால் தனக்குத் தானே தீவைத்துக் கொண்டு உயிர் நீத்துக் கொள்வதாக பேசினார். இவர்களின் இந்த பேச்சின் மூலம் ஜனாஸா அடக்திற்கான கோரிக்கையில் எவ்வித தர்க்கமும் கிடையாது என அவ்வமைப்பின் பிரதானி பிக்கு ஒருவர் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டார்.
வீடியோ Click here
Post a Comment