கம்பளையில் மரண வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டலன்ட்பேர்க் மேல் பிரிவில் 46 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் களனி பிரதேசத்தில் தொழில் புரிந்த இப்பெண்ணிடம் கடந்த 7 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவரும்வரை தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், சுகாதார அதிகாரிகளின் உத்தரவையும்மீறி இப்பெண் அங்கிருந்து ஊருக்கு வந்துள்ளார். தனது தாய் உயிரிழந்துவிட்டதால் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்காக தனது கணவருடன் கடந்த 8 ஆம் திகதி வாடகை ஆட்டோவிலேயே வந்துள்ளார். அத்தோட்டத்தில் உள்ள பலரும் மரண வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் 9 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான முடிவுகள் வந்தநிலையில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண்ணுடன் நேரடி தொடர்பில் இருந்த 6 குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மரண வீட்டுக்கு வந்துசென்றவர்களின் விபரமும் திரட்டப்பட்டுவருகின்றது.

தொற்றுக்குள்ளான அவர் பெனிதெனிய பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

ஸ்டலன்பேர்க் மேல் பிரிவுகளுக்கு செல்லும் பிரதான பாதை குன்று குழியுமாக காணப்படுவதால் கொரோன தொற்றாளர் இருக்கும் இடத்துக்கு வாகனத்தை கொண்டுசெல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 600 மீற்றர்வரை நடந்துவந்தே அன்புலன்ஸ் வண்டியில் ஏறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.