அரச சேவையாளர்களின் சம்பளம் உயர்த்தபடுமா? – பந்துல குணவர்தன விடுத்துள்ள அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், அரச சேவையாளர்களுக்கு முழுமையான சம்பவளம் வழங்கப்படுகின்றமை குறித்து, அவர்கள் ஆச்சரியப்பட வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அரச சேவையாளர்களின் சம்பளம் ஏன் அதிகரிக்கப்படவில்லை என, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமையில், பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும்பாலான மக்கள் தொழில்களை இழந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பல்வேறு நபர்களின் வருமானம் குறைவடைந்து ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், அரச சேவையாளர்களுக்கு முமையான சம்பவளம் வழங்கப்பட்டமை குறித்து, அவர்கள் ஆச்சரியப்பட வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.