சற்றுமுன் நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு.

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 5 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 68 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காய்ச்சல் காரணமாகவே குறித்த உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், தர்கா நகரைச் சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 18 ஆ திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மக்கோன பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் கடந்த 19 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரும் கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் கொரோனா தொற்றினால் குறித்த உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.