கொரோனா வைரஸை குணப்படுத்தும் என தெரிவித்து இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுகின்ற மூலிகை மருந்துகளை பொது மக்கள் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுதேச மருத்துவ, ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்களில் விற்பனை செய்யப்படுகின்ற இவ்வாறான மூலிகை மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
எனவே, அதனை உபயோகிக்க வேண்டாம்.
கொரோனா பரவலை கையாளும் போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்கள் மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை இறுக்கமாக பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment