கம்பளை தொழிற்சாலை ஒன்றில் தளபாடங்களை திருடிய நபர் கைது!

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜயமாலப்புர பகுதி தொழிற்சாலை ஒன்றில் தளபாடங்களை திருடிய சந்தேகத்தில் ஒருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சில தினங்களுக்கு முன்னர் தலைமறைவாகி இருந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையையடுத்து கம்பளை பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவினர் அவர் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்து, சந்தேக நபரைக் கைது செய்தனர். இதன்போது மேசை, கதிரைகள் உட்பட திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபரை கொரக்கொய டொன்சைட் பகுதியில் மறைந்திருந்தபோதே அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சம்பத் விக்கிரமரத்னவின் வழிகாட்டலுக்கமைய, குற்றத் தடுப்பு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தலைமையிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.