சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி கண்டி மாவட்டத்தில் (11.12.2020) இதுவரை 519 கொவிட்-19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளர்.
இதில் ஆகக் கூடுதலானவர்கள் அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 135 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த படியாக கண்டி மாநகர சபைப்பிரிவில் 121 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.
ஏனைய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் அனைத்திலும் 50 ற்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளன.
இதேவேளை நேற்று கண்டி மாவட்டத்தில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Post a Comment