வானொலி முஸ்லிம் சேவையில் நான்கு உலமாக்களுக்கு தடை! நடந்து என்ன?

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் பிரபல உலமாக்கள் 4 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌலவி யூசுப் முப்தி, மௌலவி அப்துல் ஹாலிக், மௌலவி முர்ஷித் முழப்பர் மற்றும் அஷ்ஷெய்க் பழீல் ஆகிய நான்கு பிரபல உலமாக்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இனிவரும் காலங்களில் இவர்கள் நான்கு பேரும் முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சிகளை நடத்தவோ இவர்களின் பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவோ முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 13 வருடங்களாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் நல்ல பல விடயங்களை பகிர்ந்து கொண்ட எனக்கு இனிமேல் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டமைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று மௌலவி யூசுப் முப்தி அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அஷ்ஷெய்க் பழீல் நளீமி குறிப்பிடுகையில் 32 வருடங்களாக  நிகழ்ச்சிகளை நடத்தி வந்த என்னை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டதாகவும், பலமான கோரிக்கை விடுத்து பல தொலைபேசி அழைப்புகள் கூட்டுத்தாபன நிர்வாகத்திற்கு வந்தமையாலேயே இவ்வாறு நடந்துள்ளதாக அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் பொறுப்பாளர் சனூஸ் முஹம்மது பெரோஸ் தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார். 

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் இடம்பெற்ற சில நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்தே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஒய்வு பெறுவதற்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் அங்கு உருவாகி இருக்கின்ற புதிய சூழ்நிலைகளுக்கு இணங்க முடியாததன் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும், எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதியிலிருந்து இராஜினாமா அமுலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.